கோஷ்டி மோதலில் 5 பேர் மீது வழக்கு


கோஷ்டி மோதலில் 5 பேர் மீது வழக்கு
x

கோஷ்டி மோதலில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரியலூர்

தா.பழூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கீழசிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மகன் கோவிந்தராஜ்(வயது 60). இவரது அண்ணன் மருதகாசியின் வயல் வழியாக கோவிந்தராஜ் வயலில் வெட்டி போடப்பட்டிருந்த மரங்களை ஏற்றுவதற்காக டிராக்டரை அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மருதகாசியின் மகன் ரமேஷ் எங்கள் வயல் வழியாக ஏன் டிராக்டரை ஓட்டி வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தராஜ் வெறும் வயலில் தானே டிராக்டரை ஓட்டி வந்தேன் பயிர் செய்யவில்லை அல்லவா என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், கோவிந்தராஜ் வீட்டிற்கு அவரது சகோதரர்கள் ராமமூர்த்தி, மதியழகன் ஆகியோரை அழைத்து சென்று கோவிந்தராஜ் மகன் சுரேஷ் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் சுரேஷை, ரமேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க வந்த கோவிந்தராஜை அவர்கள் அடித்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த கோவிந்தராஜ், சுரேஷ் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் மருதகாசியின் மகன்கள் ரமேஷ், ராமமூர்த்தி, மதியழகன் ஆகியோர் மீது தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதே சம்பவத்தில் கோவிந்தராஜ் மற்றும் சுரேஷ் தன்னை தாக்கியதாக மருதகாசி மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தராஜ், சுரேஷ் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story