சிறப்பு காட்சியாக திரையிட்ட 5 தியேட்டர்கள் மீது வழக்கு


சிறப்பு காட்சியாக திரையிட்ட 5 தியேட்டர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T00:17:11+05:30)

சிறப்பு காட்சியாக திரையிட்ட 5 தியேட்டர்கள் மீது வழக்கு

கோயம்புத்தூர்

கோவை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த படங்கள் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளன. இந்த படங்கள் திரைக்கு வந்தபோது சிறப்பு காட்சியாக திரையிட அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் கோவையில் உள்ள குமரன், யமுனா, சாந்தி, கே.ஜி., காஸ்மா ஆகிய தியேட்டர்களில் கடந்த 11-ந் தேதி அதிகாலையில் வாரிசு, துணிவு படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.இதனால் இந்த தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே அரசின் உத்தரவை மீறி சிறப்பு காட்சி திரையிடப்பட்ட இந்த 5 தியேட்டர்களின் மேலாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story