மறியலில் ஈடுபட முயன்ற 55 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட முயன்ற 55 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு்ள்ளது.
கரூர்
வாங்கல் கடைவீதி வழியாக தினமும் ஏராளமான மணல் லாரிகள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த லாரிகளை மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டும் எனக்கூறி அப்பகுதி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வியாபாரிகள், பொதுமக்கள் இணைந்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் சாலை மறியலில் ஈடுபட முயன்றதாக கரூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பாலமுருகன் உள்பட 55 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story