வானூர் அருகே ரூ.18 லட்சம் நிலம் அபகரிப்பு 6 பேர் மீது வழக்கு


வானூர் அருகே ரூ.18 லட்சம் நிலம் அபகரிப்பு 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Feb 2023 6:45 PM GMT (Updated: 4 Feb 2023 6:46 PM GMT)

வானூர் அருகே ரூ.18 லட்சம் நிலம் அபகரிப்பு செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்

சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வருபவர் பொன்னுசாமி (வயது 65). இவருடைய தந்தை சமயபுரம் என்பவர் கிரையம் பெற்ற சொத்தான 6.67 ஏக்கர் நிலம், விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த பேராவூர் கிராமத்தில் உள்ளது. சமயபுரம் மரணமடைந்த பிறகு அவரது வாரிசுகளுக்கு நிலம் பாகப்பிரிவினை செய்யப்படவில்லை. இந்நிலையில் பொன்னுசாமிக்குரிய பாகத்தை பிரித்துத்தராமல் மொத்த சொத்தையும் அவரது அண்ணனான பேராவூர் கிராமத்தில் வசித்து வரும் சுப்பிரமணி குடும்பத்தினர் அபகரித்துக்கொண்டனர். அபகரிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.17 லட்சத்து 97 ஆயிரத்து 430 ஆகும்.

இதுகுறித்து பொன்னுசாமி, விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுப்பிரமணி, அவரது மனைவி அன்னக்கிளி, மகன் திவாகர், மகள்கள் சரண்யா, லட்சுமி பிரபா, சந்தியா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story