விவசாயியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு


விவசாயியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு
x

விவசாயியை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டனர்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள போத்துராவுத்தன்பட்டி இருப்புக்குழி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 50). விவசாயி. இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த நடராஜன் (50) என்பவருக்கும் கோவிலில் உரிமை கோருவது குறித்து முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று கடைவீதியில் நின்ற சண்முகசுந்தரத்தை, முன்விரோதம் காரணமாக நடராஜன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த மதன் (26), கலியபெருமாள் (69), கோகிலா (45), இளையராஜா (30), கார்த்திக் (35) ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கி உள்ளனர்.

இதில் காயம் அடைந்த சண்முக சுந்தரம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து சண்முகசுந்தரம் குளித்தலை நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில், தோகைமலை போலீசார் நடராஜன் உள்பட 6 பேர் வழக்குப்பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story