சார்பதிவாளர், வக்கீல் உள்பட 7 பேர் மீது வழக்கு
போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்ததாக சார்பதிவாளர், வக்கீல் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தென்காசி
அச்சன்புதூர்:
மேல கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பண்டாரம் இவருடைய மனைவி வெள்ளையம்மாள் (வயது 75). இவருக்கு கடந்த 1989-ம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறையால் 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. அதில் வெள்ளையம்மாள் வீடு கட்டி வசித்து வருகிறார். இந்த நிலையில் சிலர் போலி ஆவணம் தயாரித்து, வெள்ளையம்மாளின் நிலத்தை மற்றொருவரின் பெயருக்கு பத்திர பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெள்ளையம்மாள் தென்காசி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்ததாக, மேல கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த காரேஸ்வரி (51), பரமேஸ்வரி (35), சாந்தி (31), மூக்கையா (50), முருகேஷ் (45), வக்கீல் சுப்பிரமணியன், சார்பதிவாளர் சங்கர் ஆகிய 7 பேர் மீது கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story