குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது வழக்கு;தொழிலாளர் துறையினர் நடவடிக்கை


குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது வழக்கு;தொழிலாளர் துறையினர் நடவடிக்கை
x

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

ஆய்வு

சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவுப்படி, கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் குமரன், ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் சசிகலா ஆகியோர் அறிவுரைப்படி, ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் குடியரசு தினமான நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டுள்ளதா? அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவத்தை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்பித்து முன் அனுமதி பெற்றுள்ளனரா? என ஆய்வு செய்தனர்.

70 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

இந்த ஆய்வானது மாவட்டத்தில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள 93 கடைகள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இதில் 70 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 70 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story