இடப்பிரச்சினையில் மோதல்-9 பேர் மீது வழக்கு
மூலைக்கரைப்பட்டி அருகே இடப்பிரச்சினையில் மோதல் தொடர்பாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
திருநெல்வேலி
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கல்லத்தி நடுத்தெருவை சேர்ந்தவர்கள் மாடசாமி மனைவி ராஜம்மாள் (வயது 48), அதே தெருவை சேர்ந்தவர் சுப்பையா (57). இவர்கள் 2 பேருக்கும் வயல்காட்டில் இடப்பிரச்சினை இருந்து வந்தது. மேலும் 2 பேர் தரப்புக்கும் இடையே நேற்று முன்தினம் வயல்காட்டில் வைத்து இடப்பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். அதில் ராஜம்மாளுக்கும், சுப்பையாவுக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் விசாரணை நடத்தினார்கள். சுப்பையா, முத்துகாளை, மகேஸ்வரி, நவரோஸ் மற்றும் ராஜம்மாள், மகேஷ், இசக்கிமுத்து, மகாதேவன், முருகன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story