2-வது திருமணம் செய்ததாக ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு


2-வது திருமணம் செய்ததாக ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Oct 2022 1:00 AM IST (Updated: 20 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

2-வது திருமணம் செய்ததாக ஆயுதப்படை போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சேலம்

மேட்டூர்:-

மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள குருக்கள்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மனைவி வினு பிரியா (வயது 24). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி சிறிது நாட்களிலேயே கோவிந்தனுக்கு போலீஸ் துறையில் பணி கிடைத்தது. தற்போது அவர் சேலம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

கோவிந்தன்-வினு பிரியா தம்பதிக்கு, ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கோவிந்தன் கோவையில் பணியாற்றும்போது, அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததாக வினு பிரியாவுக்கு வேறு ஒருவர் மூலம் தகவல் கிடைத்தது. இது குறித்து அவர் விசாரித்ததில், அவருடைய மாமனார் ரவி, மாமியார் பாவனா ஆகியோர் சேர்ந்து தனது கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்தது தெரியவந்ததை அடுத்து அவர்கள் 3 பேர் மீதும் மேட்டூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 2-வது திருமணம் செய்ததாக ஆயுதப்படை போலீஸ்காரர் கோவிந்தன் மற்றும் அவரின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story