தந்தை- மகள்கள் மீது வழக்குப்பதிவு


தந்தை- மகள்கள் மீது வழக்குப்பதிவு
x

போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி செய்தது தொடர்பாக தந்தை- மகள்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி

தர்மபுரி அருகே ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 45). இவருக்கு சொந்தமான 1,262 சதுர அடி நிலம் ஏ.ஜெட்டி அள்ளி பகுதியில் இருந்தது. இந்த நிலத்தை இவருடைய உறவினரான ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்த ஷாயினா (33) என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து ஆள் மாறாட்டம் செய்து தனது சகோதரி ஷகிலா (36) என்பவருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார். இதற்கு உடந்தையாக இவர்களுடைய அப்பா காதர் அப்துல்லா (63) செயல்பட்டுள்ளார். பின்னர் இந்த நிலத்தை வேறு ஒருவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளனர். இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த பாத்திமா தர்மபுரி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் மேற்கண்ட 3 பேர் மீது புகார் அளித்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story