கண்ணாடி குடோன் உரிமையாளர்கள் மீது வழக்கு
கோவையில் கண்ணாடி குடோன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை செல்வபுரம் அருகே திருநகரில் கண்ணாடி குடோன் உள்ளது. நேற்று முன்தினம் இந்த குடோன் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு கண்ணாடி ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இதில் 15 அடி உயரம் கொண்ட பிரமாண்ட கண்ணாடியை 4 தொழிலாளர்கள் சேர்ந்து லாரியில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி சரிந்தது.
இதில் கோவை கரும்புகடையை சேர்ந்த பாபு என்ற முஸ்தபா (வயது 52), செல்வபுரத்தை சேர்ந்த அபுதாகீர் (55) ஆகியோர் கண்ணாடிக்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் வின்சென்ட் கோவை ரோட்டை சேர்ந்த அப்பாஸ் என்ற ஷாஜகான், மற்றொரு அபுதாகீர் ஆகியோர் காயமடைந்தனர்.
அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குடோன் உரிமையாளர்கள் ராகேஷ் மேத்தா, கஜேந்திரன் ஆகியோர் மீது செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.