இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு


இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு
x

இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே மேலத்தானியம் பஸ் நிறுத்தம் அருகே கடந்த 21-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவில் இந்து முன்னணியின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ் சிறப்பு பேச்சாளராக பங்கேற்று பேசினார். இதில் இவர் மத உணர்வை தூண்டி, பகைமை உணர்வை தூண்டும் வகையில் பேசியும் தமிழக அரசின் கொள்கைகளை விமர்சித்தும், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் கூறி முருகதாஸ் மீது காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 More update

Next Story