பா.ஜனதா மாவட்ட தலைவர் மீது வழக்கு


பா.ஜனதா மாவட்ட தலைவர் மீது வழக்கு
x

அனுமதியின்றி கட்சி கொடி, பேனர் வைத்ததாக பா.ஜனதா மாவட்ட தலைவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் நேற்று முன்தினம் அரண்மனை பகுதியில் மோடி அரசின் 9-வது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மேடை அமைத்து கட்சி கொடிகளையும் பேனர்களையும் அனுமதியின்றி ரோட்டில் வைத்ததாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் தரணிமுருகேசன், நகர் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story