அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு
அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் நகரம் பகுதியை சேர்ந்தவர் தயாநிதி (வயது 40). ராமேசுவரம் அரசு போக்குவரத்து கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் ராமேசுவரத்தில் இருந்து பழனிக்கு அரசு பஸ்சை ஓட்டி சென்று நேற்று இரவு ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு அவரை மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்த எம்.எஸ்.கே. நகரை சேர்ந்த சூர்யா (24) மற்றும் சிலர் சேர்ந்து தயாநிதியிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் தயாநிதியை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story