பொது இடத்தில் கழிவுநீரை ஊற்றியவர்கள் மீது வழக்கு


பொது இடத்தில் கழிவுநீரை ஊற்றியவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 14 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொது இடத்தில் கழிவுநீரை ஊற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியை ஒட்டி அரசு புறம்போக்கு நிலத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கழிவு நீரை டிராக்டரில் கொண்டு வந்து சிலர் ஊற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி ஜெயகாந்தன் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் 9 டிராக்டர் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story