வனத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு


வனத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு
x

அம்பையில் வனத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகம் அம்பை-முக்கூடல் சாலையில் உள்ளது. அந்த அலுவலகத்தில் கடந்த 13-ந்தேதி அத்துமீறி நுழைந்த ஒருவர் அனுமதி இன்றி செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். அதுகுறித்து வனத்துறையினர் கேட்டபோது அவர் சரிவர பதில் அளிக்காமல் வெளியேறி உள்ளார். இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பக பிரியா கொடுத்த புகாரின் பேரில் அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story