சேலம் அரசு ஆஸ்பத்திரிக்குகருக்கலைப்புக்கு வந்த பட்டதாரி பெண் மீது வழக்குபோலீசார் விசாரணை
சேலம்
சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த 22 வயதுடைய பட்டதாரி இளம்பெண் ஒருவர், அரசு போட்டி தேர்வு எழுதுவதற்காக அந்த பகுதியில் உள்ள மையத்திற்கு படிக்க சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கும், அந்த மையத்திற்கு படிக்க வந்த வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தங்களது பெற்றோர்களிடம் போட்டி தேர்வு மையத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று நெருக்கமாக பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளம்பெண் கர்ப்பமான விஷயம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கருவை கலைப்பதற்காக அந்த பெண்ணை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக மருத்துவமனை மூலமாக அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருமணம் ஆகாத நிலையில் கருக்கலைப்புக்கு வந்த அந்த இளம்பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.