அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேர் மீது வழக்குப்பதிவு


அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேர் மீது வழக்குப்பதிவு
x

அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜா உள்பட 110 பேர் மீது தலைஞாயிறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.



Next Story