பாப்பிரெட்டிப்பட்டி அருகே மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


பாப்பிரெட்டிப்பட்டி அருகே மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:05 PM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மூதாட்டியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மூக்காரெட்டிபட்டியை சேர்ந்தவர் கமலா (வயது 72), விவசாயி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கவுண்டம்பட்டியில் உள்ள தங்கை சின்னதங்கம் இறந்து விட்டார். அவரது வீட்டை கமலா பராமரித்து வந்தார். கடந்த 31-ந்தேதி மூக்காரெட்டிபட்டியை சேர்ந்த மாணிக்கம் மகன் சங்கர் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேருடன் வந்து சின்னதங்கம் வீட்டின் முன் இருந்த பழ மரங்கள், வீட்டில் இருந்த தகர சீட்டு, பாத்ரூம் கதவு ஆகியவற்றை சேதபடுத்தினர். இதை தட்டிக்கேட்ட கமலாவை மண்வெட்டியால் தாக்கி, இங்கே இருந்தால் கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த மகள் கலைமணி, கமலாவை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் சங்கர் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் மீது ஏ.பள்ளிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story