அக்காள்-தம்பியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
அக்காள்-தம்பியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள சத்திப்பட்டு ரமணாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் மகன் பாரத்(வயது 35). தொழிலாளியான இவருடைய அக்காள் பாமாவை விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த தேவ்(39) என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வசித்து வருகின்றனர். இந்தநிலையில் தேவ், விவாகரத்து கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து வெளியே வந்ததேவ், அவரது சகோதரர்கள் கார்த்திகேயன்(43), தேவநாதன்(33), தாய்மங்கை(65) ஆகிய 4 பேரும் சேர்ந்து பாரத், பாமா ஆகிய இருவரையும் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாரத் கொடுத்த புகாரின் பேரில் தேவ் உள்ளிட்ட 4 பேர் மீதும் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.