தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே கா.மாமனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கொட்டி வைத்திருந்த மணலை தனது மனைவி முத்துலட்சுமியுடன் சேர்ந்து அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார். இதை அறிந்து அங்கு ராஜி மற்றும் முருகன், வேலாயுதம், அஜித்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து சங்கர், முத்துலட்சுமி ஆகியோரை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் முருகன், வேலாயுதம், அஜித்குமார், ராஜி ஆகிய 4 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story