தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
தம்பதியை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழியான் (வயது 41). இவரது மனைவி மகாலட்சுமி (35). இந்த தம்பதியின் மகள் ஸ்ரீதியா (15), உறவினர்களான நடராஜன் (57), கீர்த்தனா (28). இவர்கள் 5 பேரும் கோவிலுக்கு செல்வதற்காக தங்களது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் அவரது மனைவி புவனேஸ்வரி, கனகராஜ் அவரது மனைவி மேகலா ஆகியோர் கனிமொழியான் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தகராறு செய்து அவர்களை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் காயமடைந்த கனிமொழியான் உள்ளிட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து கனிமொழியான் கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் சதீஷ்குமார், புவனேஸ்வரி, கனகராஜ், மேகலா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.