ஆட்டோ டிரைவரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

ஆட்டோ டிரைவரை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே சுவிஷேசபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் ஈஸ்டர்ராஜ் (வயது 47). ஆட்டோ டிரைவரான இவர் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கமிட்டி உறுப்பினராகவும் உள்ளார். அந்த ஆலயத்தில் அப்பகுதியைச் சேர்ந்த செல்வின் (55), தினகர் (43), அலெக்சாண்டர் (43), சுரேஷ் (44), கோயில்பிச்சை (73) ஆகியோரும் கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் ஆலய நிர்வாகம் தொடர்பாக பாஸ்கர் ஈஸ்டர்ராஜ் அவதூறாக பேசியதாக கூறி, செல்வின் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து அவரை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், செல்வின் உள்ளிட்ட 5 பேர் மீதும் திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story