சாதி பெயரை சொல்லி மிரட்டிய 5 பேர் மீது வழக்கு

சாதி பெயரை சொல்லி மிரட்டிய 5 பேர் மீது வழக்குப்திவு செய்யப்பட்டது.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே எருக்குமணிப்பட்டியில் உள்ள பகவதியம்மன் கோவிலில் கடந்த 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கோவிலில் அன்னதானம் நடந்தது. இதில் பங்கேற்ற ஒரு சமூகத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மருதை (வயது 36) என்பவரை அதே ஊரை சேர்ந்த சிவலிங்கம், லெட்சுமணன், அண்ணாத்துரை, பொன்செல்வம், பாலசுப்பிரமணியன் ஆகிய 5 பேரும் சேர்ந்து சாதி பெயரை சொல்லி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருதை கொடுத்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





