முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு
முதியவரை தாக்கிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூர்
கிருஷ்ணராயபுரம் வட்டம் கண்ண முத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 63). கல்யாண தரகர். இவர் கடந்த 11-ந்தேதி தனது உறவினரான பாலசுப்பிரமணியனுடன் இருப்புக்குழி தடுப்பணை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது கும்மாயம்பட்டி பகுதியை சேர்ந்த வடிவேல், அருண்குமார், தேவராஜ், மாணிக்கம், முருகேசன், கார்த்திக் ஆகிய 6 பேரும் சங்கரை வழிமறித்து தாக்கி, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த சங்கர் கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வடிவேல் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story