வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு:பாஸ்போர்ட் அதிகாரிக்கு விதித்த தண்டனையை ரத்து செய்ய முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு:பாஸ்போர்ட் அதிகாரிக்கு விதித்த தண்டனையை ரத்து செய்ய முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பாஸ்போர்ட் அதிகாரி, கணவருக்கு விதித்த தண்டனையை ரத்து செய்ய முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பாஸ்போர்ட் அதிகாரி, கணவருக்கு விதித்த தண்டனையை ரத்து செய்ய முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பணம் பறிமுதல்

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2010-ல் மண்டல பாஸ்போர்ட் உதவி அதிகாரியாக பணியாற்றியவர் கீதாபாய். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தன. அதன் பேரில் சி.பி.ஐ. போலீசார் வழக்குப் பதிவு செய்து கீதாபாய், அவரது கணவர் நரசிம்மபாய் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து ரூ.17.50 லட்சம் மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள வங்கி வைப்பு நிதி ஆவணங்களை சி.பி.ஐ. போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, மேற்கண்ட இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2016-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை அரசுடமையாக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது.

தள்ளுபடி

இந்த தண்டனையை எதிர்த்து அவர்கள் இருவரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். அப்போது சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆஜராகி, மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என வாதாடினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை எனக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story