அமைச்சர் கார் மீது காலணி வீசிய வழக்கு - பாஜகவை சேர்ந்த 2 பெண்களுக்கு ஜாமின்..!


அமைச்சர்  கார் மீது காலணி வீசிய வழக்கு - பாஜகவை சேர்ந்த 2 பெண்களுக்கு ஜாமின்..!
x
தினத்தந்தி 25 Aug 2022 2:02 PM GMT (Updated: 25 Aug 2022 2:06 PM GMT)

பாஜகவை சேர்ந்த 3 பெண்கள் கைதான நிலையில் 2 பேருக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

காஷ்மீரில் வீரமரணமடைந்த மதுரை டி. புதுப்பட்டி லட்சுமணனின் உடலுக்கு கடந்த 13-ம் தேதி அஞ்சலி செலுத்திவிட்டு வந்த தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த குமார், பாலா, கோபிநாத், ஜெயகிருஷ்ணன், கோபிநாத், முகமது யாகூப், ஜெயவேல், பாஜக மகளிர் அணியை சேர்ந்த 3 பெண்கள் சரண்யா, தனலெட்சுமி, தெய்வானை ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனை தொடர்ந்து இவர்கள் ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த விசாரணைக்கு வந்தது குமார் உட்பட 6 பேருக்கு ஜாமீன் வழங்கியும் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில் 2 பெண்களுக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது.பாஜகவை சேர்ந்த 3 பெண்கள் கைதான நிலையில் 2 பேருக்கு ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. தன லட்சுமி மற்றும் தெய்வானை இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.சரண்யா என்பவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது


Next Story