எம்.பி.க்கள், எம்.எல்.ஏ உள்பட 177 பேர் மீது வழக்குப்பதிவு
ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ உள்பட 177 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
சிவகாசி,
சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. இந்த ரெயில் சிவகாசியில் நின்று செல்ல வலியுறுத்தி அனைத்துகட்சியினர், வர்த்தக சங்கத்தினர் சார்பில் நேற்றுமுன்தினம் ரெயில்மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர், மதுரை எம்.பி. வெங்கடேசன், சிவகாசி எம்.எல்.ஏ.அசோகன் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர். இதுகுறித்து சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் புகாரின் பேரில் போலீசார் எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், வெங்கடேசன், அசோகன் எம்.எல்.ஏ. உள்பட 177 பேர் அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றதாக வழக்குபதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story