பா.ஜ.க.வினர் 25 பேர் மீது வழக்குப்பதிவு


பா.ஜ.க.வினர் 25 பேர் மீது வழக்குப்பதிவு
x

அனுமதியின்றி ெபாதுக்கூட்டம் நடத்த முயன்றதாக பா.ஜ.க.வை சேர்ந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அனுமதியின்றி ெபாதுக்கூட்டம் நடத்த முயன்றதாக பா.ஜ.க.வை சேர்ந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம்

அருப்புக்கோட்டையில் பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் மேடை அமைக்கும் பணிகள், கொடிக்கம்பங்கள் நடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் இடத்திற்கு சென்றனர்.

அப்போது போலீசார் பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை எனவே உடனடியாக மேடையை அப்புறப்படுத்துமாறு கூறினர்.

25 பேர் மீது வழக்கு

அதனை ஏற்க மறுத்த பா.ஜ.க. நிர்வாகிகள் போலீசார் அனுமதி மறுத்தது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் தரவில்லை. இது சம்பந்தமாக காலையில் பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என கோரிக்கை வைத்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் போலீசார் அனுமதி இல்லாமல் பொதுக்கூட்டம் நடத்த முயன்றதாக கோரி பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதற்கு நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நிர்வாகிகளை அருகில் உள்ள மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் பொது கூட்டத்திற்காக போடப்பட்ட மேடைகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கூடியிருந்ததாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டுெரங்கன் உள்பட 25 பேர் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story