பொங்கல் அன்று மதுபோதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது வழக்குப்பதிவு


பொங்கல் அன்று மதுபோதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் மீது வழக்குப்பதிவு
x

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தினர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் நகரின் முக்கிய சாலைகள் போக்குவரத்து நெரிசல் இன்றி இருக்கிறது.

மேலும் பல சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளதை போலீசார் உணர்ந்தனர். எனவே பொங்கல் பண்டிகை அன்று 190 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் 5 ஆயிரத்து 904 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த சோதனையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 376 பேர் சிக்கினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு சிறப்பு வாகன சோதனை நடத்தப்படும் என்றும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.


Next Story