ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை தாக்கிய பாகன் மீது வழக்குப்பதிவு
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை தாக்கிய பாகன் மீது வழக்குப்பதிவு
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்
மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர் மீட் அசார் (வயது 28). பீட்டா அமைப்பு நிர்வாகியான இவர், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் அளித்த புகாரில், "ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள யானை தாக்கப்பட்டுள்ளது. யானையை தாக்கிய பாகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார்.. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், வனவிலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் பாகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story