கரும்புக்கான நிலுவை தொகையை வட்டியுடன் வழங்கக்கோரிய வழக்கு:6 மாவட்ட கலெக்டர்கள் பதில் அளிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கரும்புக்கான நிலுவை தொகையை வட்டியுடன் வழங்கக்கோரிய வழக்கு:6 மாவட்ட கலெக்டர்கள் பதில் அளிக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கரும்புக்கான நிலுவை தொகையை வட்டியுடன் வழங்கக்கோரிய வழக்கில் 6 மாவட்ட கலெக்டர்கள் பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


கரும்புக்கான நிலுவை தொகையை வட்டியுடன் வழங்கக்கோரிய வழக்கில் 6 மாவட்ட கலெக்டர்கள் பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கரும்புக்கான தொகை

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்த சுந்தரவிமல்நாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் பல வருடங்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை அந்த தொகை நிர்ணயம் செய்யப்படாமல் உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு சட்டப்பூர்வமாக நிர்ணயித்துள்ள விலையின் அடிப்படையில் விவசாயிகள் கரும்புகளை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட கரும்புக்கு உரிய தொகையை 14 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு தவறும் பட்சத்தில் அதற்கான தொகையை 15 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் உள்ள பல சர்க்கரை ஆலைகள் 2017-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை நிலுவைத்தொகையை வட்டியுடன் வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும், கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய கால தாமதத்திற்கான வட்டியை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

6 மாவட்ட கலெக்டர்கள்

இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மத்திய அரசின் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர், திருச்சி, தஞ்சை, தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களின் கலெக்டர்கள், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க ேவண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.


Next Story