மளிகை கடையில் நகை-பணம் திருட்டு


மளிகை கடையில் நகை-பணம் திருட்டு
x

மளிகை கடையில் நகை-பணம் திருட்டு

திருப்பூர்

வீ.மேட்டுப்பாளையம்

வெள்ளகோவில் அருகே புதுப்பையில் ஒரு மளிகை கடை உள்ளது. இந்த கடையை வெங்கடேஸ்வரன் பவித்ரா தம்பதியினர் நடத்தி வருகிறார்கள். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு உள்ளே ஒரு அறையில் தூங்கினார்கள். அதிகாலை எழுந்து பார்த்த போது கடையில் உள்ளே கல்லாவில் இருந்த ரூ.40ஆயிரம், 4½ பவுன் வளையல் 2-ம்,செல்போனும் திருட்டுப்போனது தெரிய வந்தது. கடையின் ஷெட்டரை நெம்பி உள்ளே சென்ற மர்ம ஆசாமிகள் நகை,பணம்,செல்போனை திருடிச்சென்றுள்ளனர்.

இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.


Next Story