ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அஸ்திரங்கள்,பணம்,எலுமிச்சம்பழம் வைத்து பூஜை
சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 4 அஸ்திரங்கள், பணம் ரூ.101, 6- எலுமிச்சம்பழம் ஆகியவை வைத்து பூஜை
காங்கயம்
காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 4 அஸ்திரங்கள், பணம் ரூ.101, 6- எலுமிச்சம்பழம் ஆகியவை வைத்து பூஜை செய்யப்படுகிறது.
ஆண்டவன் உத்தரவுபெட்டி
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பிரசித்திபெற்ற மலை சிவன்மலை. இந்த மலையின் உச்சியில் முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கொங்குமண்டலத்தில் சிவன்மலை முருகப் பெருமான் கோவில் புகழ் மிக்கது. கந்தனின் பாதம் கனவிலும் காக்கும் என்ற வாசகத்தை உச்சரிக்கும் பக்தருக்கு வாழ்நாள் முழுவதும் முருகப்பெருமான் துணையிருப்பதாக நம்பிக்கை.
ஒவ்ெவாரு கோவிலிலும் வெவ்வேறு சிறப்புகள் உண்டு என்பதை போல இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி சிறப்பு அம்சமாகும். முருகனை மனமுருக வேண்டும் பக்தர்களின் கனவில் முருகன்பெருமான் தோன்றி அருள்வாக்கு கூறும் பொருளை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும். அப்படி பூஜை செய்யப்படும் பொருட்களுக்கு கால நிர்ணயம் எதுவும் கிடையாது. அடுத்த பொருட்கள் ஆண்டவன் உத்தரவு பெட்டிக்கு வரும்வரை பழைய பொருளே இடம்ெபற்று இருக்கும்.
அஸ்திரம் வைத்து பூஜை
அந்த வகையில் காங்கயம் அருகே முத்தூரை சேர்ந்த விவசாயி கோகுல்ராஜா(வயது38) என்ற பக்தரின் கனவில் விருஷ்ப அஸ்திரம், தனூர்பாண அஸ்திரம், வருண அஸ்திரம், பாசுபத அஸ்திரம், பணம் ரூ.101, 6-எலுமிச்சம்பழங்கள் ஆகியவை வைத்து பூஜை செய்யுமாறு உத்தரவு கிடைத்தது. இந்த விவரத்தை அவர் கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அதன்படி நேற்று முதல் வஸ்திரங்கள், ரூ.101, எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி முதல் தீர்த்தகலசம் வைத்து பூஜிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பக்தர்கள் தரப்பில் கூறும்போது " ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூைஜ செய்யப்படும் 4 அஸ்திரங்கள், பணம், எலுமிச்சம்பழம் ஆகியவை சமூகத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போகத்தெரியும்" என்றனர்.