திருவாரூருக்கு விற்பனைக்கு வந்த முந்திரி பழங்கள்


முந்திரி பழங்கள் சீசன் தொடங்கி விட்ட நிலையில் அதன் வியாபாரிகள் திருவாரூருக்கு விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர். ½ கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

திருவாரூர்


முந்திரி பழங்கள் சீசன் தொடங்கி விட்ட நிலையில் அதன் வியாபாரிகள் திருவாரூருக்கு விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர். ½ கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்து வருகின்றனர்.

முந்திரி பழங்கள்

திருவாரூரில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் குளிர்ச்சியான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். பழரசம், பழங்கள், நுங்கு, இளநீர் உள்ளிட்டவைகள் விற்பனை செய்து வருகின்றனர். விற்பனைக்கு பலவகையான பழங்கள் கொண்டுவந்தாலும் தற்போது சீசன் தொடங்கியதால் முந்திரிபழம் விற்பனைக்கு வந்துள்ளது.

ஆனால் முந்திரி பழம் என்று சொல்லும் போது அது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. பலருக்கு பழத்தின் வடிவம் தெரியாது. முந்திரியில் உடலுக்குத் தேவையான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. சத்தான முந்திரி சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. முந்திரி அனைவருக்கும் பிடித்தமான ஓன்று அதை சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது.

ஆண்டுக்கு ஒருமுறை மகசூல்

ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் தரும் இந்த முந்திரி மரங்களில் இருந்து ஏப்ரல், மே மாதங்களில் அறுவடைக்கு தயாராக பழங்கள் கிடைத்து விடும். ½ கிலோ ரூ.50-க்கும், பழத்தின் அளவை பொருத்து 1 பழம் ரூ.5 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், முந்திரிப் பழமானது இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, இத்துடன் நம நமப்பும் இணைந்திருக்கும். வறட்சியிலும் விளைச்சல் தரும் இந்த முந்திரி பழ மரம் தமிழகத்தில் நீர் செழிப்பான பகுதிகளில் ஏராளமாக உள்ளன.

சிறு, சிறு வியாபாரிகள்

முந்திரி விதைகளை அகற்றிவிட்டு பழங்கள் மட்டும் சில்லறை விற்பனைக்கு வருகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை மருத்துவ குணம் நிறைந்த இந்த பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பழ சீசன் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முடிவுக்கு வரும்.

தற்போது முந்திரி பழத்தை வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வாங்கி வருவார்கள். அவர்களிடம் இருந்து எங்களை போன்ற சிறு, சிறு வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்கிறோம். தற்போது சீசனுக்கு வந்துள்ள இந்த பழங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர்.


1 More update

Next Story