ஜவ்வரிசி விலை உயர்வால் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனை


ஜவ்வரிசி விலை உயர்வால் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனை
x

ஜவ்வரிசி விலை உயர்வால் மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

கரூர்

மரவள்ளிக்கிழங்கு

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், பேச்சிப்பாறை, கவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச்சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர்.

ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனை

மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது ரூ.14 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கடந்த வாரம் டன் ஒன்று ரூ.13 ஆயிரத்து 500 விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு விலை உயந்துள்ளதால் மரவள்ளிக்கிழங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மரவள்ளிக்கிழங்கு பயிர்கள் நோய் தாக்குதலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது விளைச்சலில் உள்ள மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. மேலும் ஜவ்வரிசி விலை உயர்ந்து கொண்டே வருவதால் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும் என்றனர்


Next Story