50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பூனை மீட்பு


50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பூனை மீட்பு
x

வெண்ணந்தூர் அருகே 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த பூனையை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டனர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் அருகே நெ.3.குமாரபாளையம் ஊராட்சி, வசந்தம் நகரில் ஊர் பொது கிணறு ஒன்று உள்ளது. இந்த 50 அடி ஆழ கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி, பூனையை உயிருடன் மீட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story