உடுமலை பகுதியில் ஆடு, மாடுகளை கடித்து குதறும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

உடுமலை பகுதியில் ஆடு, மாடுகளை கடித்து குதறும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
x

உடுமலை பகுதியில் ஆடு, மாடுகளை கடித்து குதறும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

திருப்பூர்

தளி

உடுமலை பகுதியில் ஆடு, மாடுகளை கடித்து குதறும் நாய்களை பிடிக்க வேண்டும் என்று ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

ஒன்றியக்குழு கூட்டம்

உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நேற்று காலை அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகவடிவேல், ஒன்றியக்குழு ஆணையர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கிராம ஊராட்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் குறித்த 24 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 25-வது தீர்மானமாக 2023-2024 ல் நடைபெற உள்ள ஊராட்சி ஒன்றிய பொது நிதி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் ஜல்லிபட்டி, பூலாங்கிணர், அந்தியூர், பெரியகோட்டை, கணக்கம்பாளையம், தேவனூர் புதூர், செல்லப்பம்பாளையம், கணக்கம்பாளையம், குரல்குட்டை, பள்ளபாளையம், பெரியவாளவாடி, புங்கமுத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சிமெண்ட் சாலை, பாலம் புதுப்பித்தல், தார்சாலை, கழிவுநீர் கால்வாய், பேவர் பிளாக் சாலை, கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளது. பின்னர் 15-வது மத்திய நிதி குழு மானியம் மூலமாக 2023-24-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வேட்டை நாய்கள்

பெரியகோட்டை, தாந்தோணி, சின்னவீரம்பட்டி கிராமங்களில் கால்நடைகள் வேட்டையாடுவதை தடுப்பதற்காக ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாய்கள் பிடிக்கப்பட வேண்டும் என்று கால்நடை துறையினர் தெரிவித்தனர். அதற்கு பிரதிநிதிகள் தரப்பில் வேட்டைக்கு செல்லும் நாய்களை வேட்டை முடிந்த பிறகு உரிமையாளர்கள் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இதனால் வேட்டையாடி பழகிய நாய்கள் ஒன்றிணைந்து ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுகிறது.அதை வனத்துறையினர் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

சுண்டக்காம்பாளையத்தில் சேதமடைந்து உள்ள சுகாதார நிலையத்தை புதுப்பிக்க வேண்டும் உடுமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜெனார்த்தனன், மலர்விழிபாபு, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. ஆதிதிராவிட நலக்குழு துணைஅமைப்பாளர் முருகன் உள்ளிட்ட 26 ஒன்றிய குழு உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story