கோவையில் கத்தோலிக்க ஆயர்கள் கூட்டம்
தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர்கள் கூட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. 23 ஆயர்கள் இதில் கலந்துகொண்டனர்
கத்தோலிக்க ஆயர்கள் கூட்டம்
தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆண்டு கூட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. கோவை புனித மைக்கேல் அதிதூதர் பேராலய மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் இருந்து இதையொட்டி பேரணி நடைபெற்றது.
இதில் பேண்டு வாத்தியங்கள் முழங்க முதன்மை குருக்கள், பேராயர்கள் அணிவகுத்து வந்தனர். தமிழகத்தில் உள்ள 23 கிறிஸ்தவ கத்தோலிக்க ஆயர்கள் பங்கேற்றனர்.
பேராலய மேடைக்கு வந்த ஆயர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.
ஆயர் பேரவை தலைவர்
ஆயர் பேரவையின் தொடக்க விழா மற்றும் திருப்பலி ஆயர் பேரவையின் தலைவர், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிச்சாமி தலைமையில் நடைபெற்றது. புனிதத்திருப்பலி மற்றும் தொடக்க விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
நேற்று தொடங்கிய தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை ஆண்டு கூட்டம் 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் அனைத்து மறை மாவட்ட பணிக்குழுகளின் செயலர்கள், ஆண்டு செயல்பாடுகளை அறிக்கையாக சமர்பிக்க உள்ளனர். அடுத்து வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 23 மறை மாவட்ட பணிக்குழுக்களின் செயலாளர்களாக உள்ள பங்கு தந்தையர்கள், துறவர சபைகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.