கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்


கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
x

எருமப்பட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல்

எருமப்பட்டி

எருமப்பட்டி சிங்களம் கோம்பையில் கால்நடை துறையின் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை கால்நடை துறை உதவி இயக்குனர் மருதுபாண்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் எருமப்பட்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கந்தசாமி மற்றும் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முகாமில் கொல்லிமலை அடிவாரப் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் தங்கள் வளர்க்கும் மாடுகளை அழைத்து வந்தனர். இதில் பெரிய அம்மை நோய், தடுப்பூசி சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், குடல் புழு நீக்கம் முதலியவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மாடுகளுக்கு தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த முகாமில் கலந்து கொண்ட சிறந்த கிடாரி கன்று குட்டிகளுக்கும், சிறப்பாக பசு மாடுகள் வளர்த்த விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றனர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை எருமப்பட்டி கால்நடை மருத்துவர் சேகர் செய்திருந்தார்.


Next Story