பெரியம்மை நோய் பரவலால் பாதிப்புக்குள்ளாகும் மாடுகள்


பெரியம்மை நோய் பரவலால் பாதிப்புக்குள்ளாகும் மாடுகள்
x

பெரியம்மை நோய் பரவலால் மாடுகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

அரியலூர்

தா.பழூர்:

பெரியம்மை நோய் பரவல்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் பரவி வருகிறது. மழைக்காலத்தை தொடர்ந்து அதிக அளவு கொசுக்கள் மற்றும் ஈ உற்பத்தி காரணமாக இந்த நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு மாட்டு அம்மை, தோல் கழலை நோய் என்று வேறு பெயர்களும் உண்டு. மேலும் மாவட்டம் முழுவதும் பரவலாக மாடுகளுக்கு அம்மை நோய் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நோயின் ஆரம்ப நிலையில் உடல் முழுவதும் தோலில் சிறிய வடிவில் அம்மை கட்டிகள் வந்து, பின்பு ஒரு ரூபாய் நாணயம் போன்ற வட்டமான காயங்களை ஏற்படுத்தும். இது ஒரு விலங்கிடம் இருந்து மற்ற விலங்குக்கு ஈக்கள், சிறு பூச்சிகள், கொசுக்கள், உண்ணிகள் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் விலங்குகளுக்கு காய்ச்சல், தோலில் அம்மை போன்ற கட்டிகள், கண் மற்றும் மூக்கில் இருந்து நீர் வடிதல், பால் சுரப்பது குறைதல், சாப்பிடுவதில் சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன.

விவசாயிகள் கவலை

இதைத்தவிர முகம், கழுத்து, வாய், மூக்கு, கண் இமைகள் ஆகியவற்றில் கட்டிகள் ஏற்படும். கால்களில் வீக்கம் ஏற்பட்டு அதனால் நொண்டுதல், நடையில் தடுமாற்றம், நடப்பதை குறைத்துக் கொள்வது போன்ற சிக்கல்கள் ஏற்படும். இந்த நோயால் மாடுகளுக்கு உடல் முழுவதும் கொப்புளங்கள் ஏற்பட்டு, பின்னர் அது உடைந்து புண்ணாக மாறி மாடுகளுக்கு கடுமையான வலியை ஏற்படுத்துவதாக விவசாயிகள் வேதனையுடனும், கவலையுடனும் தெரிவித்தனர்.

மேலும் நவீன மருத்துவ வசதிகள் பல்வேறு நோய்களுக்கு இருந்தாலும், சில கொடிய நோய்களுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இயற்கையாக விளைந்துள்ள மூலிகை செடிகளை கொண்டு விவசாயிகள் தங்கள் மாடுகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிகிச்சை முறை

இது குறித்து கிரீடு வேளாண் அறிவியல் மைய கால்நடை தொழில்நுட்ப வல்லுனர் கார்த்திக் கூறுகையில், இந்த நோய் பெரிய அளவில் தாக்கி முற்றும்போது பசுக்கள் இறக்க நேரிடுகிறCattle affected by outbreaks of smallpoxது. இந்த நோயினால் பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு கருக்கலைப்பு ஏற்படுகிறது. இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை தனியாக மருத்துவம் எதுவுமில்லை. வெற்றிலை 10, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம், வெள்ளம் தேவையான அளவு (அதிகப்படியாக 50 கிராம்) எடுத்துக்கொண்டு, அவற்றை அரைத்து அதனை உருண்டையாக்கி, நோய் ஏற்பட்ட மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு நாக்கில் தடவிவிட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 3 முறை தடவி விட வேண்டும்.

இதேபோல் குப்பைமேனி இலை 1 கைப்பிடி, வேப்பிலை 1 கைப்பிடி, துளசி இலை 1 கைப்பிடி, மருதாணி இலை 1 கைப்பிடி, மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பல் ஆகியவற்றை அரைத்து வேப்ப எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை அரை லிட்டர் எடுத்துக்கொண்டு அதில் கலந்து கொதிக்க வைத்து, பின்னர் ஆற வைத்து, அதனை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து மாடுகளின் தோல் மீது ஏற்பட்டுள்ள காயங்களை நன்கு சுத்தப்படுத்திய பின்னர், அந்த மருந்தை மேல்பூச்சாக பூச வேண்டும். இதன் மூலம் மாடுகளை உயிரிழப்பில் இருந்து காப்பாற்ற முடியும், என்றார்.


Next Story