புலி தாக்கி பசுமாடு பலி:வனத்துறை சார்பில் உரிமையாளருக்கு இழப்பீடு

புலி தாக்கி பசுமாடு பலி:வனத்துறை சார்பில் உரிமையாளருக்கு இழப்பீடு
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-02T00:15:55+05:30)

புலி தாக்கி பசுமாடு பலி:வனத்துறை சார்பில் உரிமையாளருக்கு இழப்பீடு

நீலகிரி

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 2 டிவிஷன் பகுதியைச் சேர்ந்த சித்தராஜ் என்பவரது பசுமாட்டை புலி கடித்துக் கொன்றது. இதனால் உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட சித்தராஜ் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையில் வனத்துறையினர் உயிரிழந்த பசு மாட்டின் உரிமையாளர் சித்த ராஜிக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை பொதுமக்கள் முன்னிலையில் வழங்கினர்.

Next Story