புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது


புதன் சந்தையில் மாடுகள் விலை குறைந்தது
x
நாமக்கல்

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே உள்ள புதன் சந்தை நேற்று வழக்கமாக கூடியது. அந்த சந்தையில் கடந்த வாரம் ரூ.19 ஆயிரத்திற்கு விற்ற பசு மாடு இந்த வாரம் ரூ.18 ஆயிரத்து 500-க்கும், எருமை கடந்த வாரம் ரூ.25 ஆயிரத்திற்கு விற்றது இந்த வாரம் ரூ.24 ஆயிரத்திற்கும் குறைவாக விற்பனையானது.

அதேபோல பசு கன்று ரூ.11 ஆயிரத்திற்கு விற்றது ரூ.500 குறைந்து 10 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. எருமை கன்று குட்டிகள் விற்பனை ஆகாமல் இருந்தது. கேரளாவில் மீன் வரத்து அதிகமாகி இருப்பதால் இங்குள்ள சந்தையில் மாடுகள் விலை குறைந்தது என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. நேற்று அந்த சந்தையில் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த சந்தைக்குள் ஆட்டோக்கள் கொண்டு வந்து ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் வியாபாரிகள், கால்நடைகளுக்கு இடையூறாக அமைந்து விடுகிறது. எனவே மாடுகளை இறக்கி விட்ட உடன் ஆட்டோக்களை சந்தையின் வெளிப்புறமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story