சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்; விபத்துகள் அதிகரிப்பு


சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்; விபத்துகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொண்டியில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரித்து உள்ளது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன. அதிக போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் கால்நடைகள் நடமாடுவதால் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி காயமடைந்தும் பல நேரங்களில் உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றனர். எனவே கிழக்கு கடற்கரை சாலையில் மாடுகள் மற்றும் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story