மப்பேடு சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள்


மப்பேடு சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள்
x
தினத்தந்தி 11 Sep 2023 9:35 AM GMT (Updated: 11 Sep 2023 11:35 AM GMT)

மப்பேடு சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு கிராமத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் மப்பேடு, கீழச்சேரி, பண்ணூர், கண்ணூர் சாலை, திருப்பந்தியூர் சாலை போன்ற பகுதிகளில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் நெடுஞ்சாலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து வருகின்றன.

இதன் காரணமாக அந்த வழியாக கார், லாரி, ஆட்டோ, பஸ், மோட்டார் சைக்கிள், பஸ் போன்ற வாகனங்களில் வருபவர்கள் எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே ஓடிவரும் கால்நடைகளின் மீது மோதி விபத்தில் சிக்குகிறார்கள்.

இதில் பலர் படுகாயம் அடைந்தும், சிலர் இறந்தும் உள்ளனர். .குறிப்பாக இரவு நேரங்களில் கால்நடைகள் நெடுஞ்சாலையில் குறுக்கில் வருவதை அறியாத வாகன ஓட்டிகள் அதிக அளவில் காயமடைந்து செல்கின்றனர்.

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் கால்நடைகளை திரிய விடும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிப்பதுடன், கால்நடைகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என கலெக்டர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

எனவே மப்பேடு சுங்குவார்சத்திரம் வரை உள்ள நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story