புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1½ கோடிக்கு கால்நடைகள் விற்பனை
புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1½ கோடிக்கு கால்நடைகள் விற்பனை
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கொண்டு வந்தனர். 30 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 80 கன்றுகள், 150 ஜெர்சி ரக மாடுகள் கொண்டு வரப்பட்டன. இதில் எருமை மாடு ஒன்று ரூ.18 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், கருப்பு வெள்ளை மாடு ஒன்று ரூ.24 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரையும், ஜெர்சி மாடு ஒன்று ரூ.22 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் வரையும், சிந்து மாடு ஒன்று ரூ.16 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரையும், நாட்டு மாடு ஒன்று ரூ.72 ஆயிரம் விரையும் விற்பனையானது. வளர்ப்பு கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விலை போனது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் வெள்ளாடு ஒன்று ரூ.7 ஆயிரம் வரையும், செம்மறி ஆடு ஒன்று ரூ.6 ஆயிரம் வரையும் விற்பனையானது. சந்தையில் ஆடுகள் ரூ.50 லட்சத்துக்கும், மாடுகள் ரூ.1 கோடிக்கும் என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.