வரத்து குறைந்ததால்காலிபிளவர் விலை தொடர்ந்து அதிகரிப்பு


வரத்து குறைந்ததால்காலிபிளவர் விலை தொடர்ந்து அதிகரிப்பு
x
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களாக காலிபிளவர் வரத்து வழக்கத்தை விட குறைந்தது. இதன் காரணமாக அதன் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. தர்மபுரி உழவர் சந்தைக்கு வரத்து குறைந்ததால் 1 காலிபிளவர் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டது. காலிபிளவர் விலை உயர்ந்ததன் காரணமாக அதன் விற்பனை வழக்கத்தை விட நேற்று குறைந்தது.


Next Story