சிலிண்டர் மாற்றியபோது கியாஸ் கசிந்து தீ விபத்து


சிலிண்டர் மாற்றியபோது கியாஸ் கசிந்து தீ விபத்து
x

கலவை அருகே சிலிண்டர் மாற்றியபோது கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேச்சேரி கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் விஜி. இவர் தனது மனைவி ராஜேஸ்வரி மற்றும் மகன் சூர்யா, மகள் நித்யா ஆகியோருடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் காலியானதால் வேறு சிலிண்டரை மாற்றியபோது எதிர்பாராத விதமாக தீ பிடித்துக் கொண்டது. உடனே வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடிவிட்டனர்.

பின்னர் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு அலுவலர் பாஸ்கர் தலைமையில் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து கலவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story