நாகை ரெயில் நிலையத்தை காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை


நாகை ரெயில் நிலையத்தை காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகை
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நாகை ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

நாகப்பட்டினம்

தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நாகை ெரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

முற்றுகை போராட்டம்

நாகை ரெயில் நிலையத்தை தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கமல்ராம் முன்னிலை வகித்தார். மாவட்டத்தலைவர் பாலசுப்பிரமணியன் உள் பட விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டு கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அழுத்தம் கொடுக்க வேண்டும்

மத்திய அரசு, தமிழகத்திற்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்து விட கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தண்ணீர் இன்றி கருகிய குறுவை பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டத்தில் சம்பா சாகுபடி மேற்கொள்ள காவிரியில் இருந்து உடனடியாக தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்திம், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் இரட்டை வேடம் போடும் மத்திய அரசை கண்டித்தும் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வாக்குவாதம்

இதை தொடர்ந்து ெரயில் நிலையத்துக்குள் நுழைந்த விவசாயிகளை நுழைவாயிலில் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா தடுத்து நிறுத்தினார். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Related Tags :
Next Story