காவிரி விவகாரம் : அனைத்து கட்சி தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்: அமைச்சர் துரைமுருகன்


காவிரி விவகாரம் : அனைத்து கட்சி தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்: அமைச்சர் துரைமுருகன்
x

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து கட்சி தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்

சென்னை,

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.இந்த தீர்மானம் தொடர்பாக சட்டசபையில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து காவிரி நீர் விவகாரம் தொடர்பான தனித்தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 88வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை என தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 16 நாட்களுக்கு நீர் திறக்கக் கர்நாடகாவுக்கு உத்தரவிடக் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், காவிரி பிரச்சனைக்காக தமிழக டெல்டா மாவட்டங்களில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து முழு கடையடைப்பு நடைபெற்றது.

இது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது:

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அனைத்து கட்சி தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்போம்.நேற்று, தஞ்சையில் விவசாயிகள் நடத்திய கடையடைப்பு போராட்டத்தில் இருந்து அவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்


Next Story